அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து!

#SriLanka
Thamilini
1 year ago
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

 பாதுக்காவில் நேற்று  இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும், ஆனால் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பார்க்கும் போது திறைசேரி அல்லது நிதியமைச்சின் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு தவறான வாக்குறுதியாகும்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4