புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த யோசனை தொடர்பான பிரேரணை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 4 முதல் 11 வீதம் வரை குறைக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள மொத்த வீதம் 6.6 வீதமாகும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கை மின்சார சபையின் முன்மொழிவுகள் தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து எதிர் பிரேரணையை கூடிய விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இம்முறை மின் கட்டண திருத்தம் தொடர்பில் 30 தொடக்கம் 35 வீதம் வரை மின்சார கட்டணத்தை குறைக்கும் திறன் அரசாங்கத்திற்கு இருப்பதாக மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த 9 மாதங்களில் இலங்கை மின்சார சபை அதிக இலாபம் ஈட்டியதால், மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்மொழிந்த சதவீதம் போதுமானதாக இல்லை என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திரு.சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.