தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்!

#SriLanka #Vote #Postal
Thamilini
1 year ago
தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்!

இந்த ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் நாளை (30.10) ஆரம்பமாகவுள்ளன. 

 மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் நாளை தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 நாளை தவிர, நவம்பர் 4ம் தகதி தபால் மூல வாக்களிப்பை குறிக்கும் வாய்ப்பும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

 மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் மாதம் முதலாம் திகதியும் நவம்பர் 4ஆம் திகதியும் அடையாளப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 உரிய நாட்களில் தபால் வாக்களிக்க முடியாத தபால் வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால் வாக்கினைக் குறிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 இதேவேளை, இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகள் குறியிடப்படுவதை கண்காணிப்பதற்காக சுமார் ஆயிரம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4