ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் படுகொலை!

#SriLanka
Mayoorikka
1 year ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் படுகொலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கேகாலை, கொஸ்ஸின்னவில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 75 வயதான கிரிஷாந்த புலஸ்தி என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர், படுக்கையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

 வீட்டுக்குள் புகுந்த சந்தேகநபர்கள் புலஸ்தியின் மனைவியையும் தாக்கியதாகவும், சம்பவத்தின் போது மனைவியின் வாயைக் கட்டியதுடன் அவரை தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேகநபர்கள் குடியிருப்பில் இருந்து வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர், பின்னர் அது பிந்தெனிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

 இந்த சம்கவத்தின் நோக்கம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4