சுவிஸில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலங்கள்- பொலிசார் அதிர்ச்சித் தகவல்!
#SriLanka
Dhushanthini K
5 months ago

சுவிஸில் அடுக்குமாடிக் குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்ட 3 சடலங்கள் குறித்து Neuchâtel பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தினர் என்றும், 38 வயதான கணவன், 42 வயதான மனைவி, 17 வயதான மகள் ஆகியோரே அவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
பிரெஞ் மற்றும் தாய் குடியுரிமை கொண்டவர்களான இவர்கள்,நீண்டகாலமாக இங்கு வசித்துள்ளனர்.
தொழில்நுட்ப கண்டறிவுகளுக்கு அமைய மனைவியையும், மகளையும் சுட்டுக் கொன்று விட்டு கணவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார் என தெரியவந்திருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



