பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி படையெடுக்கும் அகதிகள் – நெருக்கடியில் அதிகாரிகள்!

#SriLanka
Thamilini
1 year ago
பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி படையெடுக்கும் அகதிகள் – நெருக்கடியில் அதிகாரிகள்!

பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு மேலும் 424 அகதிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டில் கடற்பயணம் மேற்கொண்ட அகதிகளின் எண்ணிக்கையை இந்த 2024 ஆம் ஆண்டு முற்று முழுதாக இரண்டு மாதங்கள் மீதமுள்ள நிலையில் முறியடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் தொடர்ந்து பதிவாகின்ற போதும், உயிரை பணயம் வைத்து இந்த பயணங்களை அகதிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த ஆண்டில் இதுவரை 29,578 அகதிகள் கடலைக் கடந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு மொத்தமாகவே 29,437 அகதிகள் பயணித்திருந்தனர்.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் மூன்று அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியிருந்தனர்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4