நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் அறுவர் கைது!

#SriLanka #Visa
Mayoorikka
1 year ago
நாட்டில் தங்கியிருந்த  வெளிநாட்டவர்கள் அறுவர் கைது!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் அறுவர் சீதுவ - அமந்தொலுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி வெளிநாட்டவர்கள் குழுவொன்று செயற்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்களை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்டவர்கள் 18, 23, 26, 39 மற்றும் 43 வயதுடைய பங்களாதேஷ் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4