09 வருட காதலுக்கு துரோகம் செய்த காதலி : காதலனின் அதிர்ச்சி செயல்!

#SriLanka
Dhushanthini K
2 weeks ago
09 வருட காதலுக்கு துரோகம் செய்த காதலி : காதலனின் அதிர்ச்சி செயல்!

அநுராதபுரம் - கும்பிச்சாங்குளம் இலவச வலயத்திற்கு அருகில் இன்று (30) பிற்பகல் யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

இருவரும் காதலர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான காதலி தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக காதலன் தனது காதலியை கத்தியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த யுவதி வேறு ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த சந்தேக நபர், தனது காதலியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே காதலனிடம் கத்தியும் விஷப் போத்தலும் இருப்பதை அறிந்த இளம்பெண் காதலனை தவிர்த்துவிட்டு சுமார் 500 மீற்றர் தூரம் ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.

காதலன் அவரை துரத்திச் சென்று தன்னிடமிருந்த கத்தியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைக் கண்ட மக்கள் ஒன்று திரண்டு வந்து குறித்த யுவதியை காப்பாற்றி அந்த இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.அவர்கள் சுமார் 9 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!