பிரதமர் ஹரினி அமரசூரிய அரசியலமைப்பை எங்கே கற்றுக்கொண்டார் - ரணில் கேள்வி!
#SriLanka
Dhushanthini K
10 hours ago
பிரதமர் ஹரினி அமரசூரிய அரசியலமைப்பை எங்கே கற்றுக்கொண்டார் என்பது ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் எடுப்பதற்கு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவது அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசியலமைப்பை அவர் எங்கிருந்து கற்றுக்கொண்டார் என ஆச்சரியமாக உள்ளது. அவர் கற்றுக்கொள்ள விரும்பினால் நான் கற்பிக்க முடியும்," என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டுகளில் அரச ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடிய NPP தலைமையிலான தொழிற்சங்கங்களின் நிலை என்ன என்றும் திரு விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.