தீபாவளி பண்டிகைக்காக பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு!

#SriLanka
Dhushanthini K
1 week ago
தீபாவளி பண்டிகைக்காக பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு!

தமிழ் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகைக்காக அரச பெருந்தோட்டக் கம்பனிகள் தமது ஊழியர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படும் பண்டிகை முன்பண கொடுப்பனவை பத்தாயிரம் (10,000) ரூபாவால் இவ்வருடம் உயர்த்தியுள்ளன. 

 இதனால் கடந்த ஆண்டுகளில் பத்தாயிரம் ரூபாயாக வழங்கப்பட்டு வந்த இந்த தீபாவளி பண்டிகை உதவித்தொகை இந்த ஆண்டு 20,000 ரூபாயாக வழங்கப்பட்டுள்ளது. 

 சுற்றுச்சூழல், வனவிலங்கு, வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பி.கே. பிரபாத் சந்திர கீர்த்தி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு தொழிலாளர்களின் குறைந்த வாழ்க்கைச் செலவு மற்றும் கொள்வனவு சக்தியை கருத்திற் கொண்டு இம்முறை இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!