தீபங்கள் ஒளிரட்டும்! வாழ்வு மலரட்டும்: வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

#SriLanka #Festival
Mayoorikka
7 months ago
தீபங்கள் ஒளிரட்டும்! வாழ்வு மலரட்டும்: வாசகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்

உலகெங்கும் வாழும் இந்துக்கள் இன்று வியாழக்கிழமை (31) தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

 வீடுகளிலும் தெருக்களிலும் நிறுவனங்களிலும் தீபங்களை ஏற்றி, தீப ஒளி போன்று வாழ்க்கை பிரகாசிக்க வேண்டும் என்று இறைவனை வணங்கி தீபத் திருநாள் பண்டிகையை அனுஷ்டிக்கின்றனர்.

 உலகில் தீமைகளை செய்துவந்த நரகாசூரன் என்கிற அசுரன் இந்நாளில்தான் வதம் செய்யப்பட்டான் என இந்துக்கள் நம்புகின்றனர். விளக்குகளை வரிசையாக ஏற்றி ஒளியினால் கடவுளை வழிபடும் அந்த புண்ணிய நாளினை தான் தீபாவளி என்று சொல்கிறோம். 

ஒரே விளக்கு ஏனைய விளக்குகளை ஒளி வசீச் செய்யும். இத்தத்துவத்தின் பிரகாரம், உலகில் அதர்மம் அழிந்து நீதியும் தர்மமும் உலக சமாதானமும் பிறக்க இறைவனை பிரார்த்திப்போம்! 

 தீபங்கள் ஒளிரட்டும்... வாழ்வு மலரட்டும்...! 

 லங்கா4 வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!