நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் வரை தொடரும்!
#SriLanka
#Coconut
Dhushanthini K
1 week ago
நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே கூறுகையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த நாட்டில் தேங்காய் உற்பத்தியில் தெளிவான வீழ்ச்சி காணப்படுகின்றது.
சரியான நேரத்தில் பெய்யும் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு வழிவகுத்துள்ளதாக வைத்தியர் நயனி ஆராச்சிகே குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்றுமதி நோக்கங்களுக்காக தேங்காய்ப்பால் இறக்குமதி செய்வது தொடர்பான யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே மேலும்தெரிவித்துள்ளார்.