கிராமிய வறுமையை இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் இலக்கு - ஜனாதிபதி!
கிராமிய வறுமையை இல்லாதொழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு அவர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் அமைச்சரவையொன்றும் அரசாங்கமும் உருவாக்கப்படும், அது இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இணைப்பாக தனது பங்கை மாற்றும்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு மக்களுக்கு நெருக்கமான மக்கள் தலைவர்களை உருவாக்க வேண்டும். மாவட்ட மக்களிடம் இருந்து விலகிய தலைவர்கள் அல்ல இலங்கையில் வறுமையை ஒழிக்க வேண்டும்.
இதேவேளை, கஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய, அடுத்த பாராளுமன்றத்திற்கு கொள்கை ரீதியான குழுவொன்றை தெரிவு செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.