உலக நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள 16 அரசியல் நியமனங்களை உடனடியாக மீளபெறும் அரசாங்கம்!

#SriLanka
Dhushanthini K
3 weeks ago
உலக நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள 16 அரசியல் நியமனங்களை உடனடியாக  மீளபெறும் அரசாங்கம்!

இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்களாகவும் உயர்ஸ்தானிகர்களாகவும் கடமையாற்றிய 16 அரசியல் நியமனங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், திரும்ப அழைக்கப்படும் பணித் தலைவர்களின் பட்டியல் உடனடியாக கிடைக்கவில்லை.

கிடைக்கப்பெற்ற ஆதாரத்தின்படி, இந்த பணித் தலைவர்களுக்கு ஏற்கனவே கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 1 முதல் அவர்கள் நாடு திரும்பியதும், அந்தந்த நாடுகளில் அவர்களின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து அவர்களில் யாரையாவது மீண்டும் நியமிக்கலாமா வேண்டாமா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு சேவையில், அரசியல் நியமனம் பெற்றவர்கள் லண்டன், வாஷிங்டன் டிசி, மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி போன்ற சில முக்கிய தலைநகரங்களில் கூட பணியாற்றுகின்றனர்.

அவர்களில் சிலர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலும் ஏனையவர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!