சுவிட்சர்லாந்தில் மாமிச உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#SriLanka
#Switzerland
Dhushanthini K
2 hours ago
சுவிட்சர்லாந்தில் மாமிச உணவைத் தவிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, தாவர அடிப்படையிலான உணவை ஊக்குவிக்கும் Swissveg சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சைவ உணவு உண்பவர்கள் மற்றும் தாவர உணவு உண்பவர்களின் எண்ணிக்கை சுமார் 40% அதிகரித்துள்ளது. 2024 இல், 2.9% ஆண்களும், 6.3% பெண்களும், அசைவ உணவு உண்பதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
தாவர உணவு உண்பவர்களின் சதவீதம் ஆண்களில் 0.5% மற்றும் பெண்களில் 0.9%, ஆகும். 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற கணக்கெடுப்பின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டுள்ளதாக Swissveg அறிக்கை, கூறுகிறது.
பொதுவாக, சுவிட்சர்லாந்தில் 19 பேரில் ஒருவர் இனி இறைச்சி சாப்பிடுவதில்லை என்று World Vegan Dayயை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அந்தச் சங்கம் கூறுகிறது.