25 பேருக்கும் குறைவான அமைச்சரவை : சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் - ஜனாதிபதி!
,அரசாங்கம் 25 பேருக்கும் குறைவான அமைச்சரவையை நியமிக்கும் எனவும், அவர்களின் சிறப்புரிமைகள் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மாத்தறையில் நடைபெற்ற அரசியல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்த.
கொழும்பில் உள்ள அமைச்சர்களுக்கு அரசாங்கம் வீடுகளை வழங்காது, அவர்கள் கிராமங்களுக்கு வந்து கிராமத்தில் உள்ள பிரச்சினைகளை ஆராய வேண்டும். மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
விஞ்ஞான ரீதியில் அமைச்சுக்கள் ஒதுக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, அமைச்சுக்களை வழங்கும்போது பாட அறிவையும் அனுபவத்தையும் கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
"நாங்கள் மற்ற விசுவாசிகளின் குடும்பங்களுக்கு அமைச்சுக்களை ஒதுக்க மாட்டோம், கடந்த காலங்களில், குடும்பத்திற்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் ஏற்ற அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டன, ஆனால் நாட்டின் நலனுக்காக அல்ல என்றும் ஜனாதிபதி கடந்த அரசாங்கங்களை விமர்சித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் முட்டுக்கட்டை போட முடியாத நிலையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தாமாக முன்வந்து அந்தந்த அமைச்சுக்களுக்கு பங்களிக்கும் வகையிலான பொறிமுறையொன்று உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.