பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா
உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைப் பற்றிய பயண எச்சரிக்கைகள் பிரித்தானியப் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தங்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளாமல் பயணிக்கும் பயணிகளுக்கு உரிய உதவி கிட்டாமல் போக வாய்ப்புள்ளதாகவும், அவர்களின் பயணம் ஆபத்தில் முடியவும் வாய்புள்ளதாக எச்சரித்துள்ளனர்.
நீடிக்கும் அரசியல் குழப்பம், போர், பயங்கரவாதத் தாக்குதல்கள் அல்லது தீவிர வானிலை போன்ற காரணங்களால் இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக FCDO குறிப்பிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக 226 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் FCDO முன்னெடுத்த ஆய்வுகளின் அடிப்படையில் 68 நாடுகளில் தற்போது பயணப்படுவது ஆபத்தில் முடியலாம் என பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல், உடல்நலக் கவலைகள் மற்றும் பிரித்தானியாவின் சட்டத்துடன் முரண்படும் சட்டச் சிக்கல்கள் உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் மோதல் போக்கு மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது.
அக்டோபர் 1ம் திகதி சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியுள்ளது. பெலாரஸ் நாட்டுக்கு பிரித்தானியர்கள் பயணப்பட வேண்டாம் என குறிப்பிட்டுள்ள FCDO, கைதாகும் நெருக்கடி ஏற்படாலம் என தெரிவித்துள்ளது.
லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே மோதல் நடப்பதால், பயணம் தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த பட்டியலில், ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து, ஏமன், சிரியா, சூடான், ஈரான், லிலியா, ஈராக் உட்பட 68 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.