அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு!

#SriLanka
Mayoorikka
3 weeks ago
அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே வடக்கு மக்களின் எதிர்பார்ப்பு!

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 396வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர். ஜனநாயக வெற்றியாக பார்த்தாலும் ஆறு ஆசனங்கள் தான் கிடைக்கப்போகிறது. 

இந்த 396பேரும் தேர்தலுக்கு பின்பும் மக்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் இவ்வாறு தான் கடந்த காலங்களிலும் தேர்தலுக்கு பின்பு காணாமல் போய்யிடுவார்கள் .

மக்களை ஏமாற்றாமல் செயற்பட வேண்டும் சமநிலையான பாராளுமன்றத்தில் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் குறிப்பாக பெண்களை வடமாகாணத்தின் மக்களின் எதிர்பார்ப்பு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பது எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டோம் நாட்டின் ஜனாதிபதி ஒரு பச்சை சமிக்கை காட்டியிருக்கிறார்.

 34வருடமாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்திருக்கின்றார். எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் இது தேர்தல் கால வாக்குறுதியாக இல்லாமல் தேர்தலுக்கு பின்னரும் உரிமை சார்ந்து மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் தற்போதைய அரசு முன்னெடுப்புக்களை முன்னெடுக்க வேண்டும். இந்த விடயத்தை பலர் தனிப்பட்ட ரீதியில் உரிமை கோருகின்றனர். 

இதை யாருமே உரிமை கோரி அரசியல் சாயம் பூச வேண்டாம் தமிழ் மக்களைப்பொறுத்த வரை எந்தவொரு அரசு வந்து நல்ல விடயங்களை மேற்கொண்டாலும் அதை வரவேற்க வேண்டும் 30வருட யுத்தத்தினால் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளோம் பல பெண்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஆகியுள்ளனர். எமது அரசாங்கம் மக்களுக்கு உரிமை சார்ந்த விடயத்தை முன்னெடுக்கும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!