8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

#SriLanka
Dhushanthini K
3 weeks ago
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளது.

நேற்று(02) மாலை 05 மணி முதல் நாளை (03) மாலை 05 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 02 ஆம் நிலையின் கீழ் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள, கண்டி மாவட்டத்தில் உடபலாத மற்றும் யட்டிநுவர, கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய, மாவனெல்ல, தெஹியோவிட்ட மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் இரத்தினபுரி, எஹலியகொட, எலபாத, குருவிட்ட, கொடவெல குருவிட்ட ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பதுளை மாவட்டத்தின் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல ஆகிய பகுதிகளுக்கு நிலை 01 மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!