கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட லொஹான் ரத்வத்த

#Colombo #Hospital #Lohan Rathwatta #Minister
Prasu
1 year ago
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட லொஹான் ரத்வத்த

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு ஏற்பட்ட அவசர நிலை காரணமாகவே லொஹான் ரத்வத்த தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிலிருந்து இலக்க தகடு இல்லாத, பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் அவர் கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்டு, நுகேகொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து அவதானம் செலுத்தி வைத்திய சிகிச்சைக்கு பரிந்துரைக்குமாறு நீதவான் பரிந்துரைத்ததன் காரணமாக, லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 எனினும், லொஹான் ரத்வத்தவுக்கு நேற்றிரவு ஏற்பட்ட அவசர நிலை காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4