வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டிற்கு அனுப்பும் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

#SriLanka
Thamilini
1 year ago
வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டிற்கு அனுப்பும்  தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டிற்கு அனுப்பும்  தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியிருந்த 577 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாதத்தில் பெறப்பட்ட பணம் 556 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், செப்டம்பர் 2023 உடன் ஒப்பிடுகையில், 2024 செப்டம்பரில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பணம் அனுப்புவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வருடம் மார்ச் முதல் செப்டெம்பர் வரை தொடர்ச்சியாக வெளிநாட்டு ஊழியர்களின் மாதாந்தப் பணம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கடந்த மாதம் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருமானம் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதன்படி, இவ்வருடம் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 2,348 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4