பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த சதொச நிறுவனம்

#SriLanka #prices #Sathosa #Food
Prasu
2 weeks ago
பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த சதொச நிறுவனம்

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனம் விற்பனை செய்யும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பச்சைப்பயறு ஒரு கிலோவின் விலை 51 ரூபாவினால் 850 ரூபாவில் இருந்து 799 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை கௌபீஸ் கிலோ ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 900 ரூபாவில் இருந்து 880 ரூபாவாகவும், கிலோ ஒன்றின் விலை 880 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் உள்ள அனைத்து சதொச கடைகளிலும் வெள்ளை சீனி 248 ரூபாயில் இருந்து 243 ரூபாவாக 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைவர் சமன் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 அனைத்து சதொச கடைகளிலும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை தலா 300 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!