இமயமலை பகுதியில் இருந்து குன்றில் விழுந்த பேருந்து : 36 பேர் பலி!
#SriLanka
#Accident
Dhushanthini K
4 months ago

இமயமலையில் பேருந்து ஒன்று குன்றின் மீது விழுந்ததில் 36 பயணிகள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இமயமலைப் பகுதியில் மோசமான சாலைகளால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவது வழக்கம்.
இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த ஒருவருக்கு 200,000 இந்திய ரூபாவும் காயமடைந்த நபருக்கு 50,000 இந்திய ரூபாவும் வழங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



