நாட்டின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

#SriLanka #water
Thamilini
1 year ago
நாட்டின் சில பகுதிகளில் 48 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

கேகாலை நகரின் பிரதான குழாய் உடைப்பு காரணமாக 48 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

 கேகாலை நகருக்கு நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் கல் விழுந்து சேதம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  குறித்த குழாயின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நீர் விநியோகம் வழங்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

 இதேவேளை, நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 இதன்படி, ஜா அல, கட்டுநாயக்க - சீதுவ நகரசபை பகுதிகளுக்கும், கட்டான, மினுவாங்கொட பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும் இதே காலப்பகுதியில் நீர் விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்பதாக சபை அறிவித்துள்ளது. 

 மேலும், ஜாஎல, கம்பஹா பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு நீர்விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4