தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் இறங்கியுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள்!

#SriLanka #Hospital
Thamilini
1 year ago
தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் இறங்கியுள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள்!

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 

வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் வைத்தியர் அசங்க கோனார தெரிவித்துள்ளார். 

 இப்பிரச்சினை தொடர்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னரும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை அதிகாரிகள் வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக வைத்தியர் அசங்க கோனார தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4