நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் மூவர் பலி!

#SriLanka #Accident
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் மூவர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இளம் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 

 அஹெலியகொட மற்றும் பண்டாரகம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (04.11) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 எஹலியகொட, மின்னான - இட்டமல்கொட வீதியில் சோமிசந்தவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கட்டஹெட்ட பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவராவார். 

 இதேவேளை, பண்டாரகம - பாணந்துறை வீதியின் பொல்கொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியுடன் பஸ் மோதிய விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 பண்டாரகமவில் இருந்து பாணந்துறை நோக்கிய இடது பாதையில் திருத்தப் பணிகள் இடம்பெற்றிருந்த நிலையில், அவ்வழியே பயணித்த பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. 

இதில்  முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் பயணித்த யுவதி ஒருவர் பலத்த காயமடைந்து பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே இவ்வாறுஉயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4