மீண்டும் தேர்தலைக் கோரும் தார்மீக உரிமை ஜனாதிபதிக்கு இல்லை! முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
மீண்டும் தேர்தலைக் கோரும் தார்மீக உரிமை ஜனாதிபதிக்கு இல்லை! முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதற்கு இணங்கிய சம்பள அதிகரிப்பு அல்லது மேலதிக சம்பள உயர்வை தமது அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என ஜனாதிபதி அனுரகுமார உடனடியாக நாட்டுக்கு அறிக்கை விட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 அரசாங்க ஊழியர்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர தனது வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, மீண்டும் தேர்தலை கோரும் தார்மீக உரிமை அவருக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் மாத்தறை மாவட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4