கோவிலில் பொது மன்னிப்பு கேட்க கோரி சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

#Death #Actor #Threat #Apologizes
Prasu
1 year ago
கோவிலில் பொது மன்னிப்பு கேட்க கோரி சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

இந்தி நடிகர் சல்மான் கானுக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஏற்கனவே பல முறை கொலை மிரட்டல் விடுத்து இருந்தது. இந்த கும்பல்தான் அவரை கொல்லும் நோக்கில் அவரது வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தி இருந்தது.

இதற்கிடையே சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமானவரும், மகாராஷ்டிர முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்தான் இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டது. 

அதை தொடர்ந்து சல்மான்கானிடம் ரூ.2 கோடி கேட்டு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பாந்த்ராவை சேர்ந்த ஆசம் முகமது முஸ்தான் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான்கான் உயிருடன் இருக்க விரும்பினால் அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்கு சென்று பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். 

அப்படி செய்யாவிட்டால் அவரை கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போக்குவரத்து போலீசாரின் ஹெல்ப்லைனில் நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மிரட்டல் விடுத்தவன் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சல்மான்கானின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஜெயிலில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு இந்த கொலை மிரட்டலை தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4