இன்றைய வானிலை!

#SriLanka #weather
Thamilini
1 year ago
இன்றைய வானிலை!
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

 சில இடங்களில் 50மி.மீற்றருக்கு மேல்  மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

 மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும். 

 இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4