வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கெப் வண்டி : பரிதாபமாக இருவர் உயிரிழப்பு’!

#SriLanka
Thamilini
1 year ago
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கெப் வண்டி : பரிதாபமாக இருவர் உயிரிழப்பு’!

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்வத்த மணகட வீதியின் ரபுகே வத்த பக்க வீதியில் துமோதர ஓடையை கடக்கச் சென்ற கெப் வண்டியொன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

 இந்த விபத்து நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கெப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 எவ்வாறாயினும், சம்பவத்தின் போது வண்டியில் சாரதி உட்பட நான்கு பேர் பயணித்துள்ளனர், அவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

 உயிரிழந்தவர்கள் பலல்கொடுவ மற்றும் கிரிபத்கொட பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 69 வயதுடையவர்களாவர். 

 சடலங்கள் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4