மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

#SriLanka #Jaffna
Mayoorikka
1 year ago
மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழில் மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, துன்னாலை கிழக்கு, குடத்தனை பகுதியைச் சேர்ந்த 68 வயதான 6 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 குறித்த பெண்ணுக்கு கடந்த 3ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் 4 ஆம் திகதி மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அன்றிரவே மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (05) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

 இந்நிலையில் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4