அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்களுக்கு அனுரவின் அறிவிப்பு!

#SriLanka #money #AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்களுக்கு அனுரவின் அறிவிப்பு!

கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அராங்கம் அறிவித்துள்ளது.

 அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனைக் தெரிவித்துள்ளார்.

 அத்துடன், நியாயமான காரணங்களின்றி அந்த குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே தயாரித்துள்ளது.

 மேலும், இது தொடர்பில் ஆராய்வதற்காக சமூக சேவைகள் அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 அந்த குழுவினால், அஸ்வெசும கொடுப்பனவுகள் யாருக்கு கிடைத்துள்ளது, உரிய நபர்களுக்கோ அல்லது குடும்பங்களுக்கோ அந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பிரதேச செயலகங்களிலிருந்து தகவல் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4