ஜனவரி மாத இறுதிக்குள் IMF இன் மூன்றாம் தவணைக் கடன் இலங்கைக்கு கிடைக்கும்!

#SriLanka #IMF
Thamilini
1 year ago
ஜனவரி மாத இறுதிக்குள் IMF இன் மூன்றாம் தவணைக் கடன் இலங்கைக்கு கிடைக்கும்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் மூன்றாவது தவணையை இலங்கை பெறும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை தெரிவித்தார். 

 சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் (14) நாட்டிற்கு வர இருப்பதாகவும், மூன்றாவது மதிப்பாய்வை முடிக்க பொதுவாக மூன்று மாதங்கள் ஆகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

 இரண்டு தேர்தல்கள் காரணமாக மூன்றாவது பரிசீலனை தாமதமாகியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மூன்றாவது மீளாய்வை முன்னதாக திட்டமிட்டபடி செப்டம்பரில் ஆரம்பித்திருந்தால், டிசம்பருக்குள் அதனை முடித்திருக்க முடியும் என்றும் கூறினார். 

 மூன்றாவது தவணையைப் பெற்ற பிறகு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4