கள்ள உறுதி முடித்துக் கொடுக்கும் சட்டத்தரணிகளை கைது செய்ய நடவடிக்கை! NPP அரசாங்கம்(லங்கா4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி)

#SriLanka #Lanka4 #AnuraKumara #lanka4Media #lanka4.com
Mayoorikka
4 months ago
கள்ள உறுதி முடித்துக் கொடுக்கும் சட்டத்தரணிகளை  கைது செய்ய நடவடிக்கை! NPP அரசாங்கம்(லங்கா4 ஊடகத்தின் பிரத்தியேக செய்தி)

வெளிநாட்டில் உள்ளவர்களின் காணிகளை கள்ள உறுதி மூலம் வேறொரு நபருக்கு முடித்து கொடுத்து அடுத்தவர்களின் காணிகளை அபகரிக்கும் போக்கு யாழில் அதிகரித்து வருகின்றது.

 இந்த நிலையில் ஒருவரது காணியை வேறொருவருக்கு கள்ள உறுதி மூலம் முடித்துக் கொடுத்த சட்டத்தரணி ஒருவரிடம் பாதிக்கப்பட்ட நபர் கேட்ட போது கொஞ்ச பணத்தை வாங்கிக் கொண்டு பேசாமல் போ என்று சட்டத்தரணியால் சொல்லி அனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்த நிலையில் இது குறித்த ஒரு முறைப்பாடு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய அரசு அமைந்த உடன் சட்டத்தரணி விசாரிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அனுர அரசாங்கத்தினால் இந்த கள்ள உறுதி செய்து முடித்து கொடுக்கும் சட்டத்தரணிகளுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 இதேவேளை யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் வெளிநாட்டில் உள்ளவர்களது காணிகளை சட்டத்தரணிகள் மூலம் கள்ள உறுதி போட்டு பகரிக்கின்றதாகவும் தெரியவருகின்றது. 

இந்த சட்டத்தரணிகள் பெரும்பாலனவர்கள் அரசியல் செல்வாக்கு உடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!