உலகில் மிகவும் விரும்பத்தக்க தீவு - விருது வென்ற இலங்கை

#SriLanka #island #England #Award
Prasu
1 year ago
உலகில் மிகவும் விரும்பத்தக்க தீவு - விருது வென்ற இலங்கை

இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான பயண சஞ்சிகையான Wanderlust ஏற்பாடு செய்த Wanderlust Reader Travel Awards திட்டத்தில் 'Most Desirable Island' என்ற விருதை இலங்கை வென்றுள்ளது.

லண்டனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், இலங்கை தங்கப்பதக்கத்தையும், தைவான் வெள்ளி விருதையும், புவேர்ட்டோ ரிக்கோ வெண்கல விருதையும் வென்றன.

கடந்த ஆண்டு எட்டாவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை முதலிடத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளால் வாக்களிக்கப்பட்ட இந்த விருது, இலங்கையின் வசீகரிக்கும் நிலப்பரப்புகளையும், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களைக் கவரும் வளமான வரலாற்றையும் எடுத்துக்காட்டுகிறது.

200,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 மற்ற வகைகளில், ஆஸ்திரேலியா மிகவும் விருப்பமான நாடாகவும், டோக்கியோ மிகவும் விருப்பமான நகரமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4