ரொறன்ரோ தூதரக முகாம்களை ரத்து செய்யும் இந்திய தூதரகம்
#India
#Canada
#Embassy
Prasu
1 year ago
கனடாவின் ரொரன்றோவிலுள்ள இந்திய தூதரகம், நடத்த திட்டமிட்டிருந்த தூதரக முகாம்கள் சிலவற்றை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. கனடாவின் ரொரன்றோவிலுள்ள இந்திய தூதரகம், தூதரக முகாம்கள் நடத்த திட்டமிட்டிருந்தது.
ஆனால், பாதுகாப்பு கருதி, சில நிகழ்ச்சிகளை ரத்து செய்ய தூதரகம் முடிவு செய்துள்ளது. முகாம் நடத்துபவர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு கொடுக்க இயலாது என பாதுகாப்பு ஏஜன்சிகள் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், பிராம்டனில் கோவில் ஒன்றின் முன் இந்துக்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்திய விடயம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய தூதரகம் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.