லஞ்ச ஊழல் வழக்கில் ராகம பாடசாலை தலைமை ஆசிரியர் கைது

#School #Arrest #Principal #Bribery
Prasu
1 year ago
லஞ்ச ஊழல் வழக்கில் ராகம பாடசாலை தலைமை ஆசிரியர் கைது

முதலாம் தரத்திற்கு குழந்தையொன்றை அனுமதிப்பதற்கு 150,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ராகம பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் குழந்தையின் தாயாரிடமிருந்து தனது அலுவலகத்தில் இலஞ்சம் பெற்ற போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம, மட்டுமாகல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

 கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் சுமார் 260,000 ரூபா பணம் கிடைத்துள்ளதாகவும், அவருக்கு எவ்வாறு பணம் கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4