பொதுத் தேர்தலுக்காக 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

#SriLanka #Election
Thamilini
1 year ago
பொதுத் தேர்தலுக்காக 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

எதிர்வரும் பொதுத் தேர்தல் கடமைகளுக்காக 63,145 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

 நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், அதற்காக 3200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

 12,227 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

 3109 நடமாடும் பயணங்களை நடைமுறைப்படுத்தவும், நாடு முழுவதும் 269 சாலைத் தடைகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்த. 

 அத்துடன், 214 கலகத் தடுப்புக் குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு நாசகார நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக புலனாய்வு அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4