நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!

#SriLanka #Accident
Thamilini
1 year ago
நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!

இரண்டு பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். 

 நேற்று (09) செவனகல மற்றும் பனமுர பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

 செவனகல, திவுல்கஸ் சந்தி வீதியில் மிஹிந்துபுர பிரஜா மண்டபத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் பஸ் மோதிய விபத்தில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 செவனகலவில் இருந்து திவுல்கஸ் சந்தி நோக்கி பயணித்த பஸ் ஒன்று கமுனுபுர பகுதியில் இருந்து லக்சிரிகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

 இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மற்றும் பின்பக்க சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், செவனகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாரதி உயிரிழந்துள்ளார். 

 இதேவேளை, முலடியாவல - மலபலாவ வீதியில் முலடியாவல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கை உழவு இயந்திரத்தின் ட்ரெய்லருடன் மோதியதில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4