மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பிச் சென்ற 9 இலங்கை தமிழர்கள் கைது!

#SriLanka #Neduntheevu
Thamilini
1 year ago
மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பிச் சென்ற 9 இலங்கை தமிழர்கள் கைது!

மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருந்த திருகோணமலை, மன்னார் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் உட்பட ஒன்பது பேர் சட்டவிரோதமாக நாட்டுப்படகில் நேற்று மாலை புறப்பட்டு இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே கரை இறங்கியுள்ளனர்

இவர்கள் குறித்து தகவல் அறிந்த நெடுந்தீவு அரசு அலுவலர்கள் அவர்களை மாவிலித்துறை பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நெடுந்தீவு மருத்துவமனை அரசு மருத்துவமனையில் முதலுதவி மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

நடுக்கடலில் இருநாட்டு கடற்படை பலத்த பாதுகாப்புக்கு மத்தியல் நாட்டுப்படகில் இலங்கைத் தமிழர்கள் தப்பி சென்ற சம்பவம் பாதுகாப்பு வட்டாரஅதிகாரிகள் மட்டத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4