மாத்தறை கடற்கரை வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை!
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை முன்னிட்டு மாத்தறை கடற்கரை வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் வாக்கு எண்ணும் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தின்படி, வரும், 12ம் திகதி மதியம், 12:00 மணி முதல் 13ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மாத்தறை கரையோர வீதியில் ரணவிரு சுற்றுவட்டத்திலிருந்து எலியகந்த வரையிலான வீதியில் போக்குவரத்து நிறுத்தப்படும்.
இதன்காரணமாக அந்த வீதியை தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன்படி, மாத்தறையில் இருந்து கதிர்காமம் நோக்கியும் கதிர்காமத்திலிருந்து மாத்தறை நோக்கியும் செல்லும் வாகனங்கள் புதிய தங்காலை வீதி மற்றும் பழைய தங்காலை வீதி ஊடாக பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.