திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அரிசி தட்டுப்பாடு!

Mayoorikka
2 days ago
திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அரிசி தட்டுப்பாடு!

அரிசி ஆலை உரிமையாளர்கள் அநேகமானோர் திட்டமிட்ட செயற்கையான முறையில் அரிசி தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதால் தற்போது சில பிரதேசங்களில் அரிசி விலையானது உச்சம் தொட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

 இவ்வாறான செயல்களில் ஈடுபடும் அரிசி ஆலை உரிமையாளர்கள் நாட்டரிசி விநியோகத்தை கடந்த 8ஆம் திகதி தொடக்கம் நிறுத்தியுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

 அரிசி தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலையை அவதானத்தில் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மூலம் அறிக்கை ஒன்று அழைக்கப்பட்ட போதிலும் இந்நிலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

 எதிர்வரும் சில வாரங்களில் பண்டிகைக் காலம் ஆரம்பிப்பதால் அரிசிக்கான கேள்வி அதிகரித்துள்ளது. அதன்படி, அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசி விலையை உயர்த்துவதற்கு ஒரு சில தரப்பினர் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இவ்வாறான பின்னணியில், கீரி சம்பா அரிசி கிலோ ஒன்றின் கட்டுப்பாட்டு விலையை 260 ரூபாயாக நிர்ணயித்துள்ள நிலையில் ஒரு சில பிரதேசங்களில் 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் விற்பனை குறைவடைந்துள்ளதால் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை தற்போது 260 ரூபாய்க்கு விற்க அரிசி ஆலை உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.

 நாட்டு அரிசிக்கான கேள்வி சந்தையில் அதிகரித்துள்ளதால், அதன் விலையை அதிகரிக்க நாட்டு அரிசிக்கான தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளதாக அரிசி விற்பனையாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

நாளாந்தம் அரிசிக்கான அவசியத்தில் சுமார் 70 வீதம் நாட்டு அரிசிக்கு வழங்கப்படுகிறது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடானது அரிசி ஆலை உரிமையாளர்களால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கபட்டது என விவசாய சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன. இவ்வாண்டின் மார்ச், பெப்ரவரி மாதங்களில் மற்றும் செப்ரெம்பர், ஒக்ரோபர் மாதங்களில் கிடைத்த அறுவடை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரையில் அரிசித் தேவையை பூரணப்படுத்த போதுமானதாக இருக்கும் என குறித்த சங்கங்கள் கூறுகின்றன.

 அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசி வர்த்தகர்கள் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய ஏதேனும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டால் நெல் விளைச்சலில் ஈடுபட்டுள்ள சுமார் 18 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு அறுவடையை சரியான ஒரு விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் போய்விடும் அபாயம் காணப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!