இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் நோய்!

#SriLanka
Mayoorikka
2 days ago
இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ் நோய்!

சிறுவர்களுக்கு மத்தியில் காய்ச்சல் அதிகரித்து வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

 ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு காய்ச்சல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

 “அண்மைய நாட்களாக குழந்தைகளுக்கு இடையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இது இருமல் மற்றும் சளியுடன் கூடிய காய்ச்சலாகும். மேலும், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

 எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி இருந்தால் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறியாகும். எனவே, மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உரிய இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!