தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Election
Thamilini
1 year ago
தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 

 நேற்று (10) முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

 அனைத்து புகார்களும் சட்ட விதிமீறல்கள் தொடர்பானவை என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 இதேவேளை, கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் நேற்று (10) வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2811 என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 முறைப்பாடுகளில் சட்ட மீறல்கள் தொடர்பான 2756 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பான 20 முறைப்பாடுகளும் 35 இதர முறைப்பாடுகளும் அடங்கும். 

 2162 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 649 புகார்களுக்கு தீர்வு காணப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4