கெஹலியவின் வழக்கு விவகாரம் : 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெற உத்தரவு!

#SriLanka #Court Order
Thamilini
1 year ago
கெஹலியவின் வழக்கு  விவகாரம் : 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெற உத்தரவு!

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கு, அப்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். 

 கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான திரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல் சிறிபால, அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 18 பேரிடம் வாக்குமூலம் பெறுவது அவசியம் என நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிஸ் லக்மினி கிரிஹாகம, மாளிகாகந்த நீதிமன்றத்தை அது தொடர்பான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியதையடுத்து, அதற்கு அனுமதியளித்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4