சுவிட்சர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கான முக்கிய செய்தி

#Switzerland #Tourist #Travel
Prasu
1 week ago
சுவிட்சர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கான முக்கிய செய்தி

சுவிட்சர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடுகிறீர்களா? அப்போது சுவிஸ் டிராவல் பாஸ் (Swiss Travel Pass) பற்றிய முழு தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

சுவிட்சர்லாந்தின் ரயில், பேருந்து, மற்றும் படகுப் போக்குவரத்தை உள்ளடக்கிய இந்த பாஸ் மூலம், ஒரே டிக்கெட்டுடன் நாட்டில் பல அற்புதமான இடங்களைக் கண்டுகளிக்கலாம்.

சுவிஸ் டிராவல் பாஸ் கொண்டு 90க்கும் மேற்பட்ட நகரங்களில் கட்டணம் செலுத்தாமல் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யலாம். மேலும், 500-க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களில் நுழைவு கட்டணம் இல்லாமல் செல்ல அனுமதி கிடைக்கும்.

மலையேற்றப் பயணங்களில் 50% வரை தள்ளுபடி மற்றும் பல இடங்களில் பயண சலுகைகளும் உண்டு.

சுவிஸ் டிராவல் பாஸ் பயணிகளுக்கு 3, 4, 6, 8 அல்லது 15 நாள் பாஸ் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உண்டு.

தொடர்ந்து பயணிக்க விருப்பமில்லாதவர்கள், 30 நாள் காலப்பகுதிக்குள் எந்த நாளிலும் பயணிக்க அனுமதிக்கும் Swiss Travel Pass Flex-ஐ வாங்கலாம். இது நீண்டகால சுற்றுலா செய்யத் திட்டமிடுபவர்களுக்கு ஏற்றது.

6 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் Swiss Family Card மூலம் இலவசமாக பயணிக்கலாம், ஆனால் பெற்றோர்கள் Swiss Travel Pass வைத்திருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்ட இளையோருக்கு 30% தள்ளுபடி கிடைக்கிறது.

 பாஸ் ஓன்லைன் அல்லது சுவிஸ் இரயில் நிலையங்களில் உள்ள விற்பனை இடங்களில் வாங்கலாம். ஓன்லைனில் வாங்க Swiss Federal Railways (SBB) இணையதளத்தை பயன்படுத்தலாம், அங்கு QR குறியீடுடன் உடனடியாக பயணிக்கலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!