நான்கு வருடங்களாக கோமாவில் உள்ள சாத்தியராஜின் மனைவி! நடந்தது என்ன?

சத்யராஜ் மனைவி மகேஸ்வரி கடந்த நான்கு வருடங்களாக கோமா கண்டிஷனில் இருப்பதாக அவரின் மகள் திவ்யா சத்யராஜ் கூறி இருக்கிறார்.
1980-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சத்யராஜ். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்புக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சத்யராஜின் மனைவி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக, மகள் திவ்யா இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார். என் அம்மா கடந்த 4 வருடங்களாக கோமாவில் இருக்கிறார். அவர் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார். PEG டியூப் வழியாக தான் உணவு கொடுக்கிறோம். நாங்கள் மொத்தமாக உடைந்துவிட்டோம், ஆனாலும் அவர் குணமடைவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். என தெரிவித்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் மார்க்கெட் இழக்காத நாயகனாக இவர் 1979ஆம் ஆண்டு மஹேஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சிபி ராஜ் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கின்றார். இவர் மகிழ்மதி என்ற இயக்கம் ஒன்றை ஆரம்பித்து வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி வருகின்றார். விரைவில் இவர் ஒரு கட்சியுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சத்தியராஜ் ஈழத்தமிழர்களது விவகாரத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.



