தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி : கொட்டி தீர்க்கும் மழை!

#SriLanka #weather
Dhushanthini K
1 day ago
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி : கொட்டி தீர்க்கும் மழை!

தென்மேற்கு வங்கக் கடலில் இன்று (12) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 

அதன் செல்வாக்கின் கீழ், நவம்பர் 13 முதல் தீவின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு வளிமண்டல நிலைமைகள் சாதகமாக இருக்கும். 

இதன்படி  வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். பிற இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

 மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். 

 மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். 

 இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!