நாட்டின் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் தாக்கம் காரணமாக இன்றும் (13.) அடுத்த சில நாட்களிலும் நாட்டின்பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வளிமண்டல நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
வடமாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யும் அதேவேளை, தீவின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.