சுங்கத்துறை அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கை - நெருக்கடியில் லாரி உரிமையாளர்கள்!
சுங்கத்துறை அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கையால் தாங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக கொள்கலன் லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த துறைமுகத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் சனத் மஞ்சுள குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "ஒருகுடவத்தை, தொட்டலக, கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் உள்ள சாலையின் பாதுகாப்பின்மை காரணமாக, இந்த கொள்கலன்கள் துறைமுக வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டு, கொள்கலன் அனுமதியை எளிதாக்கும் வகையில் விடுவிக்கப்பட்டன.
ஆனால் அமைச்சரின் ஆய்வுக்குப் பிறகு, அவர்கள் அனைத்து கொள்கலன் லாரிகளையும் துறைமுகத்திற்கு வெளியே அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக ஒருகுடவத்தை என்ற இடத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதால், சாரதிகள் துறைமுக வளாகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.